மும்பை மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி

மும்பை: பத்து மாதங்­க­ளுக்­குப் பிறகு மும்பை மின்­சார ரயில்­களில் பொது­மக்­கள் பய­ணம் மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து இந்த ரயில்­களில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக மும்பை மின்­சார ரயில் சேவை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நிறுத்­தப்­பட்­டது. பின்­னர் ஜூன் 15ஆம் தேதி, மீண்­டும் ரயில் சேவை தொடங்­கப்­பட்டு அத்­தி­யா­வ­சிய பணி­யா­ளர்­கள் மட்­டும் பய­ணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டது.

பின்­னர் வழக்­க­றி­ஞர்­கள், வங்கி ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோர் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் பொது­மக்­களும் பய­ணம் செய்­ய­லாம் என மகா­ராஷ்­டிரா அரசு அறி­வித்­துள்­ளது.

குறிப்­பிட்ட நேரங்­களில் மட்­டுமே பொது­மக்­கள் பய­ணம் செய்ய முடி­யும் என்­றும் கொரோனா பர­வல் தடுப்பு நெறி­மு­றை­களை அனை­வ­ரும் பின்­பற்ற வேண்­டும் என்­றும் அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­களுக்கு ரயி­லில் பய­ணம் செய்ய அனு­மதி மறுக்­கப்­பட்­டது என்­றும் அரசு நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­த­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டது என்­றும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!