ரூ.1 லட்சம் சன்மானம்

குடி­ய­ரசு தினத்­தன்று டெல்லி செங்­கோட்­டை­யில் தேசிய கொடிக்­குப் பதில் வேறு கொடியை ஏற்­றி­ய­வர்­கள் தொடர்­பாக தக­வல் தரு­வோ­ருக்கு ரூ.1 லட்­சம் வெகு­மதி தரப்­படும் என டெல்லி போலிஸ் அறி­வித்து உள்­ளது.

அன்­றைய தினம் நிகழ்ந்த வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­தாக எட்­டுப் பேரின் பெயர்­களை போலிஸ் அறி­வித்து உள்­ளது. அவர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர்­க­ளான தீப் சித்து, ஜக்­ராஜ் சிங், குர்­ஜோத் சிங், குர்­ஜாந்த் சிங் ஆகி­யோர் பற்­றிய தக­வல் தந்­தால் இந்த வெகு­மதி அளிக்­கப்­படும்.

மேலும் நால்­வர்­க­ளான ஜக்­பீர் சிங், பூட்டா சிங், சுக்­தேவ் சிங், இக்­பால் சிங் ஆகி­யோ­ரைப் பற்­றிய விவ­ரங்­க­ளைத் தெரி­விப்­போ­ருக்கு 50,000 ரூபாய் வெகு­மதி தரப்­படும் என்­றும் டெல்லி போலிஸ் அறி­வித்­துள்­ளது.

விவ­சா­யி­கள் டிராக்­டர் பேரணி நடத்­தி­ய­போது வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­களை பட்­டி­ய­லிட்டு உள்ள போலி­சார் டெல்­லி­யி­லும் பஞ்­சாப்­பி­லும் அவர்­க­ளைத் தேடி வரு­கின்­ற­னர். வன்­முறை தொடர்­பாக 44 பேர் மீது முதல் தக­வல் அறிக்கை (எஃப்ஐ­ஆர்) பதிவு செய்­யப்­பட்டு உள்­ளது. விவ­சாய சங்­கத்­த­லை­வர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் உட்­பட சிலர் மீதும் காங்­கி­ரஸ் எம்.பி. சசி­த­ரூர் மீதும் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

மேலும் இது­வரை 122 பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். இவர்­களில் 80 வயது முதி­ய­வர் ஒரு­வரும் அடங்­கு­வார். அவர் ராணு­வத்­தில் பணி­யாற்றி ஓய்­வு­பெற்­ற­வர். குடி­ய­ரசு தினத்­தன்று வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சாய அமைப்­பு­கள் டிராக்­டர் பேர­ணி நடத்­தி­ன. அப்­போது போராட்­டக்­கா­ரர்­க­ளில் ஒரு­பி­ரி­வி­னர் அனு­ம­திக்­கப்­பட்ட பாதையை மீறி செங்­கோட்­டைக்­குள் புகுந்து தேசி­ய­

கொ­டியை இறக்கி சீக்­கிய கொடியை ஏற்­றி­ வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து டெல்லி போலி­சார் லத்தி சார்ஜ் நடத்­தி­யும் கண்­ணீர்ப்­பு­கைக் குண்டு வீசி­யும் வன்­மு­றை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர். வன்முறையில் ஈடுபட்ட வர்கள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்­பட்ட போலி­சார் காய­முற்­ற­னர்.

இந்­நி­லை­யில், உலோக லத்தி மற்­றும் மிகப் பெரிய தடுப்புக் கவ­சத்­து­டன் போலி­சார் பாது­காப்­பு­டன் இருக்­கும் புகைப்­ப­டம் சமூக வலைத்­த­ளத்­தில் பரவி வரு­கிறது. இது குறித்து கூறிய டெல்லி போலிஸ், “உலோ­கத்­தி­லான லத்­தி­யைப் பயன்­ப­டுத்த போலி­சா­ருக்கு எந்த அனு­ம­தி­யும் தரப்­ப­ட­வில்லை. இது குறித்து உலோக லத்தி வழங்­கி­யது யார் என விளக்­கம் கேட்­கப்­பட்­டுள்­ளது,” என்று தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!