சென்னை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட கடலோடி கொல்லப்பட்டார்

சென்னை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்ட 26 வயது கடலோடி, காட்டில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு உயிரிழந்தார். ஜனவரி 30ஆம் தேதியன்று கடத்தப்பட்ட சுரஜ் குமார் டுபே என்ற அந்த கடலோடி, மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்டார்.

கோயம்பத்தூருக்கு அருகிலுள்ள ஐஎன்எஸ் அக்ரானி கடற்படைப் பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், சென்னை விமான நிலையத்தைவிட்டு வெளியே சென்றபோது மூன்று பேர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி 10 லட்சத்தைப் பணயத் தொகையாகக் கேட்டனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, கைப்பற்றப்பட்ட சுரஜ்ஜை கடத்தல்காரர்கள் மும்பைக்கு அருகிலுள்ள பல்காருக்கு கொண்டு சென்றனர். பணயத் தொகை கொடுக்க சுரஜ்ஜின் குடும்பம் மறுத்தபோது கடத்தல்காரர்கள் ஆத்திரமடைந்து இவரைத் தீயிலிட்டுக் கொளுத்தினர். சுரஜ் ஓட்டம் பிடித்து அவர்களிடம் இருந்து தப்பித்து பொதுமக்கள் சிலரால் மருத்துவ நிலையம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட சுரஜ், மும்பை மருத்துவமனையை அடைவதற்குள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!