மோடி: என்னை நோக்கிப் பாயும் அதிருப்திக் கணைகளை ஏற்கத் தயார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் தொடர்பாக தமது அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைகளை இன்று நாடாளுமன்றத்தின் மேல் சபையில் தற்காத்துப் பேசினார். வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி அவர் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தைக் கைவிடும்படி விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதி அளித்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்து முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் போடுவதாக பிரதமர் மோடி கூறினார்.

“ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுங்கள். அதையடுத்து, நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசலாம். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாடாளுமன்ற மேல்சபையைலிருந்து உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தையொட்டி அதிபர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

“குறைந்தபட்ச ஆதரவு விலைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும். பொய்ச் செய்திகளை யாரும் பரப்பக்கூடாது,” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
“வேளாண் சட்டங்கள் தொடர்பாக இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவை அதைச் செய்யவில்லை. தற்போது தேவையான சீர்திருத்தங்களை நான் அறிமுகப்படுத்துகிறேன். இதனால் என்னை நோக்கிப் பாயும் அதிருப்திக் கணைகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

“நாம் முன்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும், பின்னோக்கிச் செல்லக்கூடாது, அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் செயல்பட வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.

டெல்லி எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அறிமுகப்படுத்தப்படும் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் இல்லாமல் போய்விடும் என்றும் பெரிய நிறுவனங்களின் தயவில் இயங்க வேண்டிவரும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால் சிறு விவசாயிகளின் நிலை மேம்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.முன்பைவிட தற்போது சிறு விவசாயிகளுக்குக் கூடுதல் நிலங்கள் இருப்பதாக அவர் கூறினார்.அதுமட்டுமல்லாது, இந்தியாவின் வளர்ச்சிக்கு சீக்கிய சமூகம் ஆற்றிய பங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
சீக்கியர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது என்றார் அவர். அவர்களுக்கு எதிராக கருத்துரைப்பதும் அவர்களைத் திசை திருப்பவும் சிலர் முயற்சி செய்கின்றனர். இது இந்தியாவுக்குப் பலனைத் தராது,” என்றார் பிரதமர் மோடி.

டெல்லி எல்லைப் பகுதியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர் சீக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் குறித்தும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்த கருத்துகளைக் கோடிட்டுப் பாராட்டினார் பிரதமர் மோடி. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் பற்றி அவர் மறைமுகமாகக் கிண்டலடித்தார்.

“குலாம் நபி ஆசாத் எப்பொழுதும் நாகரிகமாகப் பேசுபவர். முறையற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துவதே இல்லை.

“இந்த நற்குணத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் நடந்த தேர்தலை அவர் பாராட்டினார். ஆனால் இதனால் அவரது கட்சியின் மேலிடம் அவர் மீது சினங்கொள்ளும் என்ற கவலை எனக்கு உண்டு,” என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய வேளாண் சட்டங்கள் பற்றி மட்டுமல்லாது, கொவிட்-19 சூழலைப் பற்றியும் பிரதமர் மோடி பேசினார். கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொவிட்-19 கிருமியிடமிருந்து தனது மக்களைக் காப்பாற்ற இந்தியா அதனுடன் போரிட்டதாக அவர் கூறினார்.

இதில் கிடைத்த வெற்றிக்கு எந்த அரசாங்கமோ அல்லது தனிநபரோ காரணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.மாறாக, கொரோனாவை முறியடித்ததற்கு ஒட்டுமொத்த இந்தியாதான் காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!