உத்தரகாண்ட் வெள்ளம்: 19 பேர் பலி, 200 பேர் மாயம்

உத்தரகாண்ட் வெள்ளம்: 19 பேர் பலி, 200 பேர் மாயம்

1 mins read
e4ed0c30-30bc-430f-9b9e-9f1b4d991e76
மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்திய அதிகாரிகள். படம்: இபிஏ -

உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தின் சாமோலி மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் பனிப்­பாறை உடைந்­த­தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் குறைந்­தது 19 பேர் மாண்­ட­னர். 200க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளைக் காண­வில்லை.

வெள்­ளத்­தால் அப்­ப­கு­தி­யில் உள்ள சுரங்­கத்­தில் வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த தொழி­லா­ளர்­கள் பலர் சிக்­கி­யுள்­ள­னர்.

அவர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட இடத்­துக்கு மருத்­து­வக் குழு­க்களும் விரைந்தன.