குளிர்காலத்திலும் பனிப்பாறைகள் உருக்கம்; நிபுணர்களின் எச்சரிக்கை புறக்கணிப்பே பெரும் சேதங்களுக்கு காரணம்

குளிர்காலத்திலும் பனிப்பாறைகள் உருக்கம்; நிபுணர்களின் எச்சரிக்கை புறக்கணிப்பே பெரும் சேதங்களுக்கு காரணம்

2 mins read
60cf3f70-b1bf-45ad-be9d-e551a82198e0
பனிப்­பாறை உடைந்­த­தால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்­கும் சேதங்­களும் ஏற்­பட சுற்­றுச்­சூ­ழல் நிபு­ணர்­கள் முன்பே விடுத்த எச்­ச­ரிக்­கை­களை புறக்­க­ணித்­ததே கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது. படம்: இபிஏ -

பனிப்­பாறை உடைந்­த­தால் பெரும் வெள்­ளப்­பெ­ருக்­கும் சேதங்­களும் ஏற்­பட சுற்­றுச்­சூ­ழல் நிபு­ணர்­கள் முன்பே விடுத்த எச்­ச­ரிக்­கை­களை புறக்­க­ணித்­ததே கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

தற்­போது உடைந்த பனிப்­பாறை குறித்து நிபு­ணர்­கள் முன்­கூட்­டியே தெரி­வித்த கருத்­து­களை ஏன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் பரி­சீ­லிக்­க­வில்லை என சமூக ஆர்­வ­லர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

பனிப்­பா­றை­கள் உடைந்து நொறுங்­கும்­போது அத­னால் பெரு­ம­ளவு பாதிக்­கப்­படும் பகு­தி­களில் எந்­த­வி­த­மான கட்­டு­மா­னப் பணி­களை­யும் மேற்­கொள்ள வேண்­டாம் என்­பதே நிபு­ணர்­க­ளின் எச்­ச­ரிக்­கை­யாக இருந்­தது.

அப்­ப­டிப்­பட்ட ஓரி­டத்­தில் அணை கட்­டு­வ­தை­யும் மின் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தை­யும் தாம் விரும்­ப­வில்லை என்­கி­றார் பாஜக மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான உமா பாரதி.

இவர் முன்பு பிர­த­மர் மோடி­யின் அமைச்­ச­ர­வை­யில் நீர் வளம், ஆறு மேலாண்மை, கங்கை புத்­தாக்­கத்­துறை அமைச்­ச­ராகப் பதவி வகித்­த­வர்.

நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டிய ரிஷி­கங்கா ஆற்­றுப் பகு­தி­யில்­தான் இப்­பெ­ரும் துய­ரம் நிகழ்ந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், இம­ய­ம­லைப் பகுதி மிக­வும் ஆபத்­தா­னது என்­ப­தால் தாம் அதி­கா­ரி­களை முன்பே எச்­ச­ரித்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

பனிப்­பாறை உடைந்து நொறுங்­கும் எனும் பேரா­பத்து நிலவி வந்த நிலை­யில் ரிஷி­கங்கா பகு­தி­யில் மின்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது ஏன் என்­பது தமக்கு இது­வரை புரி­ய­வில்லை என சுற்­றுச்­சூ­ழல் நிபு­ண­ரான அனில் ஜோஷி கூறி­யுள்­ளார்.

வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட அணை மற்­றும் மின்­திட்ட கட்­டு­மா­னம் ஆகி­யவை உடைந்து நொறுங்­கிய கங்­கா­தேவி பனிப்­பாறை­யில் இருந்து சில மைல்­கள் தூரத்­தி­லேயே இருந்­த­தாக அவர் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"அனைத்­து­லக அள­வில் ஏற்­படும் பரு­வ­நிலை மாற்­றமே பனிப்­பா­றை­கள் உடை­யக் கார­ணம். அத­னால்­தான் குளிர்­கா­லத்­தில் கூட இவ்­வாறு ஏற்­பட்­டுள்­ளது. எனி­னும் பனிப்­பா­றைக்கு அருகே திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த நினைத்­த­தன் பின்­ன­ணி­யைப் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை," என்­கி­றார் அனில் ஜோஷி.

இதற்­கி­டையே, குளிர்­கா­லங்­களில் பனிப்­பா­றை­கள் இறுகி உறைந்து காணப்­ப­டு­வ­து­தான் வழக்­கம் என்­கி­றார் மூத்த விஞ்­ஞானி மணீஷ் மேத்தா.

"பனிப்­பா­றை­க­ளின் சுவர்­கள் ஒன்­றோடு ஒன்று இறுகி கடி­ன­மாக இருக்­கும். பாறை­கள் உருக வாய்ப்பே இல்லை. வழக்­க­மாக இந்த காலங்­களில் பனிப்­பு­யல் அல்­லது நிலச்­ச­ரிவு கார­ண­மா­கத்­தான் பனிப்­பா­றை­கள் உடை­யும். ஆனால் இந்த பனிப்­பாறை வெடிப்பு ஏற்­பட்டு உடைந்­தது வித்­தி­யா­ச­மாக உள்­ளது," என்­கி­றார் மணீஷ் மேத்தா.

ரிஷி­கங்கா ஆற்­றின் குறுக்கே 13.2 மெகா­வாட் மின்­சா­ரம் தயா­ரிக்­கும் வகை­யில் கட்­டப்­பட்டு வந்த ரிஷி­கங்கா மின்­திட்­டம் (தபோ­வன் அணை) முழு­மை­யாக ஆற்­றில் அடித்­துச் செல்­லப்­பட்­டது.

இந்த மின்­திட்­டத்­தில் பணி­யாற்றி வந்த நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளைக் காண­வில்லை. இது­வரை 16 பேரின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இந்தோ-திபெத் எல்லை படை குழு­வி­னர் இர­வி­லும் தொடர்ந்து மீட்பு பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். விபத்து நிகழ்ந்து நீண்ட நேர­மா­கி­விட்­ட­தால் வெள்­ளத்­தில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­கிறது.