(காணொளி) குஜராத்தில் சொகுசு விடுதிக்குள் நுழைந்த அரியவகை சிங்கம்

(காணொளி) குஜராத்தில் சொகுசு விடுதிக்குள் நுழைந்த அரியவகை சிங்கம்

1 mins read
c1c2f2bc-fd5f-46f6-ac1f-8bebb198161f
சமூக ஊடகக் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம். -
Google News Preferred Icon

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது.

இந்த சரணாலயத்தில்தான் ஆசிய சிங்கங்களில் நிறைய அரிய வகை சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஜூனாகத் நகரின் மையப்பகுதியில் ஓட்டலுடன் இணைந்த தனியார் சொகுசு விடுதி ஒன்று உள்ளது.

அங்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் ஒன்று ஓட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளது.

அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கருவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி தற்போது இணையவாசிகளால் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்