இந்தியா, உலக நாடுகளுக்கு இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது என இந்திய வெளி யுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் பேசிய அமைச்சின் செய்தித் தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா, இதுவரை மொத்தம் 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் அனைத்து சமூகத்திற்கு வழங்கி யிருப்பதாக தெரிவித்தார்.
"இவற்றில் 64.7 லட்சம் மருந்துகள் மானிய அடிப்படையிலும் 165 லட்சம் மருந்துகள் வர்த்தக அடிப்படையிலும் வழங்கப்பட்டு உள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் நாட்களில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படக் கூடும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய தடுப்பு மருந்து திட்டத் திற்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விநியோகம் இருக்கும் என்றும் அவர் கூறி யுள்ளார்.

