ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தியில் மாதாபுரம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
சித்தூரை சேர்ந்த 18 பேர் 'மினி வேன்' ஒன்றில் அஜ்மீர் நோக்கி புனிதப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி நொறுங்கிய வேனில் பயணம் செய்தவர்களில் 8 ஆண்கள், ஒரு குழந்தை ,ஐந்து பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த நால்வரும் சிறுவர்கள் என்று கூறப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்ததுடன், விசாரித்து வருகின்றனர்.