பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு: மேலும் எட்டு சடலங்கள் மீட்பு; பலி 46

2 mins read

டேரா­டூன்: உத்­த­ர­காண்ட் மாநி­லம் சமோலி மாவட்­டத்­தில் இருந்த நந்­தா­தேவி பனிப்­பாறை கடந்த வாரம் உடைந்­தது. அத­னைத் தொடர்ந்து அலெக்­நந்தா, தாலி­கங்கா ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. கரை­யோர மக்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­னர். அங்­கி­ருந்த அனல், நீர்­மின் நிலை­யங்­கள் பெருத்த சேதம் அடைந்­தன.

தபோ­வன் நீர்­மின் நிலைய சுரங்­கம், சேறு சக­தி­யா­லும் இடி­பா­டு­க­ளா­லும் மூடிக்­கொண்­டது.

அத­னுள்ளே வேலை செய்த 25 முதல் 30 தொழி­லா­ளர்­கள் சிக்­கிக்­கொண்­ட­னர். அவர்­க­ளை­யும், வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­வர்­க­ளை­யும் மீட்­கும் பணி நேற்று 8வது நாளாக தொடர்ந்து நடை­பெற்­றது. ஏற்ெக­னவே 38 சட­லங்­கள் மீட்­கப்­பட்ட நிலை­யில் நேற்று மேலும் எட்டு சட­லங்­களை மீட்­புக்குழு­வி­னர் கண்­டெ­டுத்து சுரங்கத்தில் இருந்து வெளி­யில் கொண்டு வந்­த­னர்.

இத­னால் மாண்­டோர் எண்­ணிக்கை 46 ஆனது. இன்­னும் 158 பேரைப் பற்­றிய எந்த விவ­ர­மும் தெரி­ய­வில்லை.

உயி­ரி­ழந்­தோ­ரில் 12 பேர் யார் என்று அடை­யா­ளம் காணப்­பட்­டு­விட்ட நிலை­யில் மற்­ற­வர்­க­ளைப் பற்­றிய விவர மும் தேடப்­பட்டு வரு­கிறது.

சேறு­களை அகற்றி அவர்­களை மீட்­கும் பணி­யில் ராணு­வம், இந்தோ-திபெத் எல்லை பாது­காப்­புப் படை, தேசிய பேரி­டர் மீட்­புப் படை, மாநில பேரி­டர் மீட்­புப் படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 450க்கும் மேற்­பட்­ட­வர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

சேறு­களை அகற்­றும் பணி­யும் துளை­யி­டும் பணி­யும் ஒரே­நே­ரத்­தில் நடை­பெற்று வரு­கின்­றன.

சனிக்­கி­ழமை இரண்டு, நேற்று மூன்று என உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தால் தேடு­தல் பணி தீவி­ரப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சமோலி மாவட்ட மாஜிஸ்­தி­ரேட் ஸ்வாதி எஸ் பதோ­ரியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் தேடு­தல் பணி­யில் யாரே­னும் உயி­ரு­டன் மீட்­கப் பட்­டால் அவர்­க­ளுக்கு மருத் துவ உத­வி­களை வழங்க ஹெலி­காப்­டர்­கள் தயார்நிலை யில் வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக வும் அவர் கூறி­னார்.