காஸிபூர்: டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள காஸிபூரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, 84, சனிக்கிழமை சென்றார். தேசிய காந்தியடிகள் அருங்காட்சியகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து வரும் தாரா, விவசாயிகள் அமைதிவழியில் போராட்டம் நடத்த வேண்டுமெனவும் விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். "அரசியல் காரணத்துக்காக நாங்கள் இங்கே வரவில்லை. நமது வாழ்நாள் முழுவதும் உணவளிக்கும் விவசாயி
களுக்காக வந்திருக்கிறோம். விவசாயிகளின் கடின உழைப்பு பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. விவசாயிகளின் நலனே நாட்டின் நலன்" என்று அவர் பேசினார்.

