ஜெய்ப்பூர்: புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் பங்கேற்பதற்காக அந்த மாநிலத்துக்கு ராகுல் காந்தி சனிக்கிழமை சென்றாா்.
பேரணி நடைபெறும் அஜ்மீரின் ருபங்காா் என்ற இடத்துக்கு டிராக்டரை ஓட்டியபடி ராஜஸ்தானின் பிரத்யேக தலைப்பாகையுடன் ராகுல் காந்தி சென்றார். அவர் ஓட்டிய டிராக்டரின் இரு புறங்களிலும் மாநில முதல்வா் அசோக் கெலோட், மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோடஸரா ஆகியோா் அமா்ந்திருந்தனா்.
ரூபங்காரில் பேரணி தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல், "நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் விவசாயிகள், சிறு, குறு வா்த்தகா்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள் ஆகியோரும் அடங்குவா். இவா்களின் ஒட்டுமொத்த தொழிலையும் தனது இரண்டு நண்பா்
களிடம் ஒப்படைக்க பிரதமா் மோடி விரும்பு கிறாா்.
"புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் இதுதான். போராடும் விவசாயிகளுக்கு மூன்று தெரிவுகளை அளித்திருப்பதாக பிரதமா் கூறுகிறாா். பசி, வேலையின்மை, தற்கொலை ஆகியவைதான் அந்த தெரிவுகள்," என்றாா் ராகுல்.
அவர் பேசிய கூட்டத்துக்கு இரண்டு டிராக்டர் டிரைலர்களைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.