சுஷாந்தின் சக நடிகர் திடீர் மரணம்

சுஷாந்தின் சக நடிகர் திடீர் மரணம்

1 mins read
4c8ff520-0d6a-42c2-a29a-cea0dce2abd3
சந்தீப் (இடது), சுஷாந்த். படம்: ஊடகம் -

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பரும் சக நடிகருமான சந்தீப் நஹார் என்பவரும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் இந்தி திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுஷாந்த்தும் சந்தீப்பும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இணைந்து நடித்தனர். சில மாதங்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சந்தீப் நஹார் நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.