சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லைகளை விரைவில் திறக்கும் இந்தியா

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பிடி­யில் இருந்து விடு­பட்ட நாடு­களில் இருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­காக இந்­தியா தனது எல்­லை­க­ளைத் திறக்­கக்­கூ­டும் என தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இது தொ­டர்­பாக தகுந்த முன்னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்­ளும் என்று அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தாக இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­காக எல்லை­க­ளைத் திறப்­பது தொடர்­பில் அமைச்­சர்­கள் அள­வி­லான பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அச்­செய்தி தெரி­விக்­கிறது.

கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விசா வழங்கு­வதை நிறுத்­தி­யது இந்தியா. எனி­னும் பின்­னர் குறிப்­பிட்ட விசாக்­க­ளின் அடிப்­ப­டை­யில் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் நாட்­டுக்­குள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இது­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், மிக விரை­வில் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­காக எல்­லை­கள் திறக்­கப்­படும் என்ற தக­வல் சுற்­று­லாத்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­களுக்கு மகிழ்ச்சி அளித்­துள்­ளது.

இதனிடையே அடுத்த இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் இந்­தி­யா­வில் சுற்­று­லாத்­துறை கொரோனா விவ­கா­ரத்­துக்கு முந்­தைய நிலையை எட்­டிப்­பி­டிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இந்­திய சுற்­றுலா சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்புத் தலை­வர் நகுல் ஆனந்த் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது வழக்­கத்­தை­விட குறை­வான அள­வி­லேயே சுற்­றுலா சார்ந்த பணி­கள் நடை­பெற்று வரு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

“கோவா, கேரளா, ராஜஸ்­தான் போன்ற முக்­கிய சுற்­று­லாத்­த­லங்­களில் 70% தங்­கும் விடுதி அறை­கள் முன்­ப­தி­வாகி உள்­ளன.

“உள்­நாட்­டுப் பய­ணி­கள் அதி­க­ள­வில் பய­ணம் மேற்­கொள்­வ­தால் இது சாத்­தி­ய­மாகி உள்­ளது. நகர்ப்­புற தங்­கும் விடு­தி­களில் அதி­க­பட்­ச­மாக 35 விழுக்­காடு அறை­கள் நிரம்­பி­யுள்­ளன. ஒட்­டு­மொத்­தத்­தில் 50 விழுக்­காடு அறை­கள் நிரம்­பி­உள்­ளன,” என்று நகுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!