'பாஜக அரசால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காப்போம்'

'பாஜக அரசால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காப்போம்'

2 mins read
d9277a26-bb7e-459a-9787-94543c5ec4f6
இந்திய விவசாயிகள் சங்கத் தலை­வர் ராகேஷ். படம்: ஊடகம் -

விவ­சா­யி­க­ளு­டன் பேச்சு­வார்த்தை நடத்த மத்­திய அரசு எப்­போ­தும் தயா­ராக உள்­ளது என மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் தெரி­வித்­துள்­ளார்.

கவு­காத்­தி­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், இரு தரப்­புக்­கும் இடை­யே­யான அடுத்­த ­கட்­டப் பேச்சு­வார்த்தை எப்­போது தொடங்­கும் என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்க மறுத்­தார்.

"பிர­த­மர் மோடி நாடா­ளு­மன்­றத்­தில் பேசும்­போது மூன்று வேளாண் சட்­டங்­கள் தொடர்­பா­க­வும் பிரிவு வாரி­யாக விவா­திக்கத் தயார் எனக் கூறி­யுள்­ளார்.

"இந்­நி­லை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள விவ­சா­யி­க­ளு­டன் நாங்­கள் தொடர்ந்து தொடர்­பில் இருக்­கி­றோம். அவர்­க­ளு­டன் ஒவ்­வொரு பிரி­வாக விவா­திப்­ப­தற்கு அரசு தயா­ரா­கவே இருக்­கிறது," என்­றார் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர்.

இதற்­கி­டையே, பல நாட்களாக நீடித்து வரும் போராட்­டத்­தின் அடுத்த ­கட்­ட­மாக மேற்கு வங்க மாநி­லம் நோக்கி டிராக்­ட­ரில் செல்­வது­தான் தங்­க­ளது திட்­டம் என விவ­சாய சங்­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

டெல்­லி­யில் விவ­சா­யி­கள் நடத்தி வரும் போராட்­டம் 86ஆவது நாளாக நேற்­றும் நீடித்­தது.

வேளாண் சட்­டங்­களை மத்திய அரசு திரும்­பப் பெறும் வரை விவசாயி­கள் வீடு திரும்பமாட்­டார்­கள் என இந்திய விவசாயிகள் சங்கத் தலை­வர் ராகேஷ் திகைத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"எங்­கள் போராட்­டத்­தின் மூல­மாக நாட்­டின் அர­சி­யல் சூழலை மாற்­று­வோம். மேற்கு வங்க மாநி­லத்­தில் இதை அடுத்த ஒரு மாதத்­தில் செய்து காட்­டு­வோம்.

"இதற்­காக மேற்கு வங்­கம் நோக்கி டிராக்­ட­ரில் செல்­வ­து­தான் எங்­க­ளு­டைய அடுத்த திட்­டம். அம்­மா­நி­லத்­தில் உள்ள விவ­சா­யி­கள் மத்­திய அர­சின் கொள்­கை­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களைப் பிரச்­சி­னை­களில் இருந்து போராடி மீட்­பது எங்­கள் பொறுப்பு," என்று ராகேஷ் திகைத் கூறி­யுள்­ளார்.

விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­கள் ஏற்­கப்­ப­டா­விட்­டால் பயிர்­களைத் தீயிட்­டுக்கொளுத்­த­வும் தயார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் நுழைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். அரசியல் சார்பு கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.