'அமித் ஷா மகனுக்கு கோடிக்கணக்கில் சொத்து எப்படி?'

'அமித் ஷா மகனுக்கு கோடிக்கணக்கில் சொத்து எப்படி?'

1 mins read
da1ef4b1-47bb-4df5-b700-1d7273c8d0fc
படம்: ஊடகம் -

மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவின் மகன் கோடிக்­க­ணக்­கில் சொத்து சேர்த்­தது எப்­படி என மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

ஊழல் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து அமித் ஷா தன் மக­னைக் காப்­பாற்ற முயற்­சிப்­ப­தாக அவர் குற்­றம்­ சாட்­டி­யுள்­ளார். மேலும் தாம் வாரிசு அர­சி­யலை ஊக்­கு­விப்­ப­தாக விமர்­சிக்­கப்­ப­டு­வதை ஏற்க இய­லாது என்­றும் மம்தா கூறி­யுள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் விரை­வில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து அங்கு அர­சி­யல் கட்­சி­கள் இடை­யே­யான வார்த்­தைப்­போர் வலுத்து வரு­கிறது.

தனது சகோ­த­ரர் மகனை மம்தா அர­சி­யல் களத்­தில் முன்­னி­லைப்­படுத்­து­வ­தா­க­வும் வாரிசு அர­சி­யலை ஊக்­கு­விப்­ப­தா­க­வும் பாஜக விமர்­சித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அமித் ஷாவை கடு­மை­யாக தாக்­கி­யுள்­ளார் முதல்­வர் மம்தா.

"அமித் ஷா தன் மகன் மீதான ஊழல் குற்­றச்­சாட்­டு­களை மறைத்து­விட்டு மற்­ற­வர்­களை குற்­றம்­ சாட்டு­கி­றார். இந்த நிலை நீடிக்­கக் கூடாது. பணமே இல்­லாத நிலை­யில் இருந்த ஒரு­வ­ரால் எப்­படி கோடிக்­க­ணக்­கில் சேர்க்க முடிந்­தது? அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எப்­படி இந்­திய கிரிக்­கெட் வாரி­யத்­தின் செய­லா­ள­ராக முடிந்­தது?

"இப்­ப­டி­யோர் உயர் பத­வியை அடை­வ­தற்கு அவர் அப்­படி என்ன செய்துவிட்­டார்? அவ­ரி­டம் என்ன தகு­தி­கள் உள்­ளன?" என்று முதல்­வர் மம்தா பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளார்.