தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரள இளையருக்கு துபாய் லாட்டரியில் ரூ.7 கோடி பரிசு

1 mins read
f0d9b19b-7174-48ce-9833-0acc4374360b
படம்: ஊடகம் -

கேரளாவைச் சேர்ந்த சரத் குன்னுமல் என்ற இளையருக்கு துபாய் லாட்டரி குலுக்கலில் ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

26 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றுகிறார்.

தமது நண்பர்கள் ஒன்பது பேருடன் சேர்ந்து அண்மையில் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் சரத்.

அதற்கு முதல் பரிசாக பத்து லட்சம் டாலர் கிடைத்துள்ளது.

பரிசை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் வயதான தமது பெற்றோரின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தப் போவதாகவும் சரத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்