புதுச்சேரி சட்டமன்றம்: மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இவர்களில் ஒருவரான திரு லஷ்மிநாராயணன், தமக்கு அக்கட்சியில் எந்த அங்கீகாரமும் கொடுக்கவில்லை என தமது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கும்போது தெரிவித்தார். மற்றோர் உறுப்பினரான வெங்கடேசன், தற்போது எதுவும் கூறவில்லை.

இந்த இரண்டு பதவி விலகல்களை அடுத்து புதுச்சேரி சட்டமன்றத்தின் 26 இடங்களில் காங்கிரசுக்கு 12 இடங்கள் மட்டுமே உள்ளன.

“நான் மூத்த தலைவராக இருந்தபோதும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை,” என்று திரு லஷ்மிநாராயணன் இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சி ஒளிவழியிடம் தெரிவித்தார். என் ஆர் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தம்மை அணுகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன், அமைச்சர் பொறுப்பில் இருந்த நமச்சிவாயம், மல்லாடிகிரு‌‌ஷ்ணாராவ், மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகிய உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!