‘இந்தியாவில் உருமாறிய புதிய கொவிட்-19 கிருமிக்கு கூடுதல் தொற்று ஆற்றல் இருக்கக்கூடும்’

மகா­ராஷ்­டி­ரா­வில் 240 புதிய உரு­மா­றிய கொரோனா கிரு­மிச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.இதுவே, அம்­மா­நி­லத்­தில் பதி­வா­கி­உள்ள அதி­க­ளவு தொற்­றுச் சம்­ப­வங்­க­ளுக்­குக் கார­ண­மாக உள்­ளது என்­றார் மகா­ராஷ்­டிர கொவிட் பணிக்­கு­ழு­வைச் சேர்ந்த டாக்­டர் ஷஷாங்க் ஜோஷி.

கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டு, பின்­னர் குண­ம­டைந்து நோய் எதிர்ப்­புச் சக்­தி­யைக் கொண்ட ஒரு கூட்­டம் உரு­வா­வது, இந்­தி­யா­வில் சாத்­தி­யப்­ப­டாத ஒன்று. ஏனெ­னில், ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­குப் பாது­காப்பு கிடைக்க, குறைந்­தது 80% மக்­களுக்­கா­வது தங்­க­ளின் உட­லில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்­டும் என்­றார் டாக்­டர் ரண்­டீப் குலே­ரியா. ஆனால், மகா­ராஷ்­டி­ரா­வில் காணப்­படும் உரு­மா­றிய இந்­திய கிரு­மிக்குத் தொற்றும் ஆற்­ற­லும் அபா­ய­மும் அதி­கம் உள்­ளது என்­றும் அத­னால் கிருமி பாதிப்­பிலிருந்து மீண்­ட­வர்­க­ளுக்கு மீண்­டும் தொற்று ஏற்­பட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஐந்து மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு திடீ­ரென அதி­க­ரித்து வரு­வது மக்­கள் மத்தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை தொடங்­கி­விட்­டதோ என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ள­தாக ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

கடந்த ஒரு மாத கால­மாக நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்­துள்­ளது. ஒரு ­பக்­கம் கொரோனா தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரும் நிலை­யில் மற்­றொரு பக்­கம் புதி­தாக நோய்த் தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்­கை­யும் கட்­டுக்­குள் வந்­துள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக புதிய பாதிப்­பு­களின் அன்­றாட எண்­ணிக்கை 10 ஆயி­ரத்­தைக் கடக்­க­வில்லை. இத­னால் மக்­கள் நிம்­ம­திப் பெரு­மூச்சு விட்­டி­ருந்த வேளை­யில், நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் சுமார் 14 ஆயி­ரம் பேர் கிரு­மித்­தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி நாடு முழு­வ­தும் 18,885 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதன்­பி­றகு தற்­போ­து­தான் அன்­றாட தொற்­றுச்­சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை அதி­க­மா­கப் பதி­வாகி உள்­ளது.

தற்­போது மகா­ராஷ்­டிரா, கேரளா, மத்­தி­யப் பிர­தே­சம், சட்­டீஸ்­கர், பஞ்­சாப் ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளில்­தான் மீண்­டும் பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 6 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­னர். சட்­டீஸ்­க­ரில் கடந்த ஒரு வாரத்­துக்­கும் மேலாக புதிய பாதிப்பு­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து ஏறு­மு­க­மாக உள்­ளது.

நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து 97.27 விழுக்­காட்­டி­னர் மீண்­டு­விட்ட போதி­லும் ஐந்து மாநி­லங்­க­ளின் தற்­போ­தைய நிலைமை சுகா­தார நிபு­ணர்­க­ளுக்கு கவலை அளித்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வைப் பொறுத்­த­வரை தலை­ந­கர் மும்­பை­யில் கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க மாந­க­ராட்சி தீவிர நட­வடிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. அங்கு கடந்த இரு தினங்­களில் மட்­டும் சுமார் ஆயி­ரம் கட்­ட­டங்­களுக்கு மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் ‘சீல்’ வைத்­துள்­ள­னர்.

அம்­மா­நி­லத்­தில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 2 மில்­லி­ய­னைக் கடந்துள்­ளது. புதிய பாதிப்­பு­கள் அதி­கரிப்­ப­தால் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை மீண்­டும் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­படும் என அம்­மா­நில அரசு எச்­ச­ரிக்கை விடுத்துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!