சொந்த மகளை விரும்பும் வங்காளம்: மம்தா புது முழக்கம்

மேற்­கு­வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி புதிய முழக்­கத்­து­டன் கள­மி­றங்கி உள்­ளார்.

‘வங்­கா­ளம் தனது சொந்த மகளை விரும்­பு­கிறது’ என்ற அவ­ரது முழக்­கம் கட்­சி­யி­னரை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் சட்­டப்­பேரவைத் தேர்­தல் நெருங்கி வரும் நிலை­யில் பிர­சார வியூ­கங்­களை அமைப்­ப­தில் அர­சி­யல் கட்­சி­கள் முனைப்­பாக உள்­ளன.

இந்­நி­லை­யில், புதிய பிர­சார முழக்­கத்தை வெளி­யிட்­டுள்­ளது முதல்­வர் மம்தா பானர்­ஜி­யின் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி.

“மம்தா பானர்ஜி என்ற ஒரே ஒரு பெயர்­தான் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்­கி­யும் கிழக்கு முதல் மேற்கு வரை­யி­லும் எதி­ரொ­லிக்­கிறது,” என்று அக்­கட்­சித் தலை­வர் அபி­ஷேக் பானர்ஜி கூறி­யுள்­ளார்.

“குரல் அற்­ற­வர்­க­ளுக்­காக குரல் கொடுக்­கும் மம்தா வங்­கா­ளத்தை முன்­னோக்கி அழைத்­துச் செல்­வார். அவ­ரால் மட்­டுமே இது சாத்­தி­ய­மா­கும். தனது மக்­க­ளுக்­காக போரா­டு­ப­வர் மம்தா. அதற்­காக அஞ்­சா­த­வர்,” என்று அபி­ஷேக் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த முக்­கிய தலை­வர்­கள் பலர் அண்­மைக்­கா­ல­மாக பாஜ­க­வில் இணைந்து வரு­கின்­ற­னர்.

இத­னால் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நெருங்­கும் வேளை­யில் முதல்­வர் மம்­தா­வுக்கு கடும் நெருக்­கடி நில­வு­கிறது.

எனி­னும் பாஜ­கவை அவர் கடு­மை­யாக எதிர்த்­தும் விமர்­சித்­தும் வரு­கி­றார்.

அவரை மேற்கு வங்­கத்­தின் மக­ளாக சித்­தி­ரிக்­கும் வகை­யில் புதிய முழக்­கம் அமைந்­துள்­ளது. இதை­ய­டுத்து புதிய சுவ­ரொட்டி, புதிய முழக்­கத்­து­டன் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் பிர­சா­ரத்தை தீவி­ரப்­ப­டுத்த உள்­ள­னர்.

இதற்­கி­டையே அபி­ஷேக் பானர்ஜி வீட்­டில் நேற்று சிபிஐ அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­னர்.

அவ­ருக்கு நிலக்­கரி ஊழ­லில் தொடர்பு இருப்­ப­தாக சிபிஐ குற்­றம்­சாட்டி உள்­ளது.

இந்த ஊழல் தொடர்­பாக மேற்கு வங்­கத்­தின் நான்கு மாவட்­டங்­களில் 13 இடங்­களில் சிபிஐ சோதனை நடத்­தி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பாஜக தொடர்ந்து அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­வ­தாக திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி குற்­றம்­சாட்டி உள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!