‘முதியோர் அதிகமுள்ள கேரளாவுக்கு தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும்’

அதிக முதி­ய­வர்­களைக் கொண்ட கேரள மாநி­லத்­திற்கு கூடு­த­லான அளவில் தடுப்­பூ­சி­களை வழங்­க­வேண்­டும் என மத்­திய அர­சுக்கு அம்­மா­நி­லத்­தின் சுகா­தா­ரத் துறை அமைச்­சர் சைலஜா கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

மத்­திய சுகா­தார அமைச்­ச­ருக்கு கேரள மாநில சுகா­தார அமைச்­சர் சைலஜா எழு­தி­யுள்ள கடி­தத்­தில், நாட்­டி­லேயே அதிக முதி­ய­வர்­களைக் கொண்ட மாநி­லம் கேரளா என்­பதை சுட்­டிக்­காட்டி, “தடுப்­பூசி போடு­வ­தில் மூன்­றா­வது முன்­னு­ரி­மை­தா­ரர்­க­ளான 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் அதி­கம் இருப்­ப­தால் கூடு­தல் தடுப்­பூ­சி­களை வழங்­க­வேண்­டும்,” என கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அத்­து­டன், ஏற்­கெ­னவே விடு­பட்­டு போன சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கும் தடுப்­பூசி போடு­வ­தற்கு அனு­மதி அளிக்கவேண்­டும் என­வும் அவர் கோரியுள்­ளார்.

கேர­ளா­வில் நேற்று முன்தினம் வரை 94% சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் 38% முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் முதல்முறை­யா­க தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

23,000க்கும் அதி­க­மான சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு இரண்­டா­வது முறை­யாக தடுப்­பூசி போடப்­பட்டுள்ளது.

கேர­ளா­வில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டும் 4,070 பேர் நோய்த் தொற்­றால் பாதிக்­கப்­பட்டனர். அத்துடன், மேலும் 15 பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும் சொல்­லப்­பட்­டுள்­ளது.

ஏறக்குறைய 58,313 பேர் தற்­போது கொரோனா தொற்­று­டன் அங்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். கோழிக்­கோடு, எர்­ணா­கு­ளம், கோட்­ட­யம், மலப்­பு­ரம், ஆலப்­புழா ஆகிய பகு­தி­களில் பாதிப்பு அதி­க­மாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களைப் பின்­பற்­றா­த­தே கார­ணம் என குற்றஞ்சாட்டி உள்ளனர் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!