இந்தியாவில் பார்தி என்னும் சமூகம் கற்பை நிரூபிக்க அக்னிப் பரிட்சை செய்ய வேண்டும் என தங்கள் இனப் பெண்களை வற்புறுத்துகிறது.
மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் பகுதியில் பார்தி சமூகப் பெண் ஒருவர் இம்மாதம் 11ஆம் தேதி கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
நான்கு நாள் கழித்து வீடு திரும்பினார். சிலர் தம்மைக் கடத்திச் சென்றதாக அந்தப் பெண் கூறியதை கார் ஓட்டு நரான கணவர் நம்பவில்லை.
அந்தப் பெண் கற்புடன் திரும்ப வந்துள்ளாரா என நிரூபிக்க கொதிக்கும் எண்ணெய்யில் ஐந்து ரூபாய் நாணயங்களைப் போட்டு அதனை எடுக்குமாறு மனைவியை அவர் வற்புறுத்தும் காணொளி கடந்த மூன்று நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கொதிக்கும் எண்ணெய்க்குள் கையைவிட்ட அந்தப் பெண் சூடு பொறுக்க இயலாமல் வேதனையில் துடிப்பதும் அந்த 1.33 நிமிட காணொளியில் தெரிகிறது.
கணவரே இந்த காணொளியை எடுத்து பரப்பி விட்டுள்ளார்.
இதனைப் பார்த்த மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைத் தலைவர் நீலம் கோர், இதுபோன்ற அக்னிப் பரிட்சை தண்டனை முறையை உடனடி யாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக்கைக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

