குறுகிய தூர இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
நாட்டின் ராணுவத் தேவைக்கான ஆயுதங்களை தயாரிக்கும் பணியை பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு மேற்கொண்டுள்ளது. முப்படைகளுக்குமான ஆயுதங்களை இந்த அமைப்புதான் தற்போது தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்திய கடற்படைக்காக நிலத்தில் இருந்து வான் நோக்கி குறுகிய தூர இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை பாதுகாப்பு அமைப்பு நேற்று முன்தினம் இருமுறை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.
தற்போது ‘சுயசார்பு இந்தியா’ என்ற முழக்கத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
இதையடுத்து உள்நாட்டுத் தயாரிப்பில் பாதுகாப்பு அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த செங்குத்தாகச் சென்று தாக்கும் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.