மோடி: சுகாதாரத்துறையில் உலகம் இந்தியாவைச் சார்ந்து இருக்கும்

மோடி: சுகாதாரத்துறையில் உலகம் இந்தியாவைச் சார்ந்து இருக்கும்

2 mins read
4be2be05-81c5-458d-8766-324f433a58f6
படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித்­தொற்று விவ­கா­ரத்தை எதிர்­கொள்­வ­தில் இந்­திய சுகா­தா­ரத் துறை காட்­டிய வலி­மையை உல­கம் அங்­கீ­க­ரித்­துள்­ளது என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய நிதி­நிலை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அம்­சங்­களை சுகா­தா­ரத் துறை­யில் செயல்­படுத்து­வது தொடர்­பாக நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் உரை­யாற்­றிய அவர், அத்­து­றை­யின் செயல்­பா­டு­க­ளைப் பாராட்­டி­னார்.

தற்­போது இந்­திய சுகா­தா­ரத் துறை­யின் செயல்­பாட்டை ஒட்­டு­மொத்த உல­க­மும் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்ப்­ப­தாக குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, எதிர்­கா­லத்­தில் இந்­திய மருத்­து­வர்­கள், துணை மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்­கான தேவை உல­கம் முழு­வ­தும் அதி­க­ரிக்­கப் போவ­தாக கூறி­னார்.

"கடந்த ஆண்டு ஒட்­டு­மொத்த உல­க­மும் சோத­னையை எதிர்­கொண்­டது. எனி­னும் இந்­தப் போராட்­டத்­தில் இந்­தியா வெற்­றி­க­ர­மா­கச் செயல்­பட்­டது. இதற்கு தனி­யார் அளித்த பங்­க­ளிப்­பும் முக்­கி­ய­மா­னது.

"எதிர்­கா­லத்­தில் வரக்­கூ­டிய நோய்­களை எதிர்­கொள்­ள­வும் நாம் தயா­ராக இருக்க வேண்­டும் எனும் பாடத்தை கொரோனா கற்­றுத் தந்­துள்­ளது. எனவே சுகா­தா­ரத் துறை­யின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் வலுப்­ப­டுத்­து­வது முக்­கி­யம்.

"மருத்­துவ உப­க­ர­ணங்­கள் முதல் மருந்­து­கள் வரை, செயற்கை சுவா­சக் கரு­வி­கள் முதல் தடுப்­பூ­சி­கள் வரை, மருத்­து­வர்­கள் முதல் தொற்­று­நோ­யி­யல் நிபு­ணர்­கள் வரை என அனைத்து வகை­யி­லும் நாம் தயா­ரா­க­வும் வலு­வா­க­வும் இருக்க வேண்­டும்," என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

இந்த ஆண்டு நிதி­நிலை அறிக்­கை­யில் சுகா­தா­ரத்­து­றைக்கு மிக அதி­க­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், இது எதிர்­பா­ராத ஒன்று என்­றார்.

"இந்­திய சுகா­தா­ரத்­துறை இந்த உல­குக்கு நல்ல உதா­ர­ண­மாக உரு­வெ­டுத்­துள்­ளது. எதிர்­வ­ரும் நாட்­களில் இந்த உல­கம் இந்­தி­யா­வைச் சார்ந்­தி­ருப்­ப­தற்­கான தேவை அதி­க­ரிக்­கும். இந்­திய மருத்­து­வக் கல்­விக்­கான தேவை அதி­க­ரிக்­கும் என்­பதை நாம் மன­திற்­கொள்ள வேண்­டும்.

"வெளி­நாட்டு மாண­வர்­கள் இந்­தி­யா­வில் மருத்­து­வம் படிக்க குவி­யத் தொடங்­கு­வார்­கள். அவர்­களை நாம் ஊக்­கு­விக்க வேண்­டும்," என்­றார் பிர­த­மர் மோடி.