வாக்குரிமை: வளைகுடா இந்தியர்களுக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்

வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபா­லில் வாக்­க­ளிப்­ப­தற்­கான உரி­மையை வழங்­கு­வது குறித்து சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளு­டன் ஆலோ­சித்து வரு­வ­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக வளை­குடா நாடு­களில் உள்ள இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­ட­லாம் என்று இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் ஐந்து மாநில தேர்­த­லில் இது நடை­மு­றைக்கு வர வாய்ப்­புள்­ள­தாக அச்­செய்தி தெரி­விக்­கிறது.

வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபா­லில் வாக்­க­ளிக்க அனு­ம­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கை தொடுத்த சம்ஷீர் வய­லில் நேற்று முன்­தி­னம் தலைமை தேர்­தல் ஆணை­ய­ரைச் சந்­தித்­துப் பேசி­னார்.

இதை­ய­டுத்து வெளி­யு­றவு, சட்ட அமைச்­சு­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி வரு­வ­தாக தேர்­தல் ஆணை­யம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு ஆசி­யா­வில் மட்­டும் கேர­ளா­வைச் சேர்ந்த 1.8 மில்­லி­யன் பேர் வேலை பார்த்து வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் வாக்­கு­ரி­மைக்­காக வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் நடத்தி வரும் சட்­டப் போராட்­டத்தை ஏற்­றுக் கொள்­வ­தா­க­வும் அதன் அடிப்­ப­டை­யில் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­வ­தா­க­வும் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது என்று சம்­ஷீர் வய­லில் கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்கா, கனடா, நியூ­சி­லாந்து, ஜப்­பான், ஆஸ்­‌தி­ரே­லியா, ஜெர்­மனி, பிரான்ஸ், தென் ஆப்­பி­ரிக்­கா­ உள்ளிட்ட நாடுகளில் வசிக்­கும் இந்­தி­யர்­க­ளுக்கு அடுத்­த­டுத்து இந்­திய தேர்­தல்­களில் வாக்­க­ளிக்­கும் உரி­மையை அளிப்­பது குறித்து மத்­திய அரசும் தேர்தல் ஆணையமும் தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!