குடும்பத்தாரைக் காப்பாற்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற பஞ்சாயத்துத் தலைவர்

கர்நாடகாவைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சிறுத்தையைக் கொன்று தன் குடும்பத்தாரைக் காப்பாற்றி உள்ளார்.

ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் நேற்று தனது மனைவி, மகளுடன் இருசக்கர வாகனத்தில் பெண்டகெரே பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு சிறுத்தை குறுக்கே வந்துள்ளது. 

அதன் மீது இருசக்கர வாகனம் மோதியதால் ராஜகோபால் உள்ளிட்ட மூவரும் கீழே விழுந்தனர்.

இதையடுத்து சிறுத்தை மூவரையும் தாக்கியது. பதறிப்போன ராஜகோபால் மனைவி, மகளைக் காப்பாற்ற சிறுத்தையுடன் மோதினார். 

கையில் கிடைத்தவற்றை எடுத்து அவர் சிறுத்தையை தாக்கிய நிலையில் அவருக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன.

இறுதியில் சிறுத்தையின் தலையில் பலமாகத் தாக்கிய ராஜகோபால் அதை தூக்கி வீசினார். இதில் அச்சிறுத்தை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் அச்சிறுத்தையை வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.

முன்னதாக பைரகொண்டனஹள்ளி என்ற கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை அங்கு தாய், மகன் ஆகிய இருவரைத் தாக்கியுள்ளது. 

இதையடுத்து அக்கிராம மக்கள் அதை விரட்டி அடித்துள்ளனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.