தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அம்பானி வீடு அருகே காரில் வெடிபொருள்; மிரட்டல் கடிதம்

1 mins read
c3467d12-7ae3-4fa7-9986-d5f9afe1135a
அம்பானி வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம் -

மும்பை: மும்பை கும்­பாலா ஹில், ஆல்­டா­ம­வுண்ட் சாலை­யில் உல­கப் பணக்­கா­ரர்­களில் ஒரு­வ­ரான முகேஷ் அம்­பா­னி­யின் 'அண்­டி­லியா ஹவுஸ்' என்ற அடுக்­கு­மாடி மாளிகை அமைந்­துள்­ளது.

அந்த இல்­லத்­தில் இருந்து ஏறக்­கு­றைய 500 மீட்­டர் தொலை­வுக்­குள் ஒரு கார் இர­வில் பல மணி நேரம் நிறுத்­தி­வைக்­கப்­பட்டு இருந்­தது. சந்­தே­கம் அடைந்த அம்­பானி ஊழி­யர்­கள் போலி­சை அழைத்தனர்.

மோப்ப நாய்­க­ளு­டன் போலிஸ் பட்­டா­ளமே களத்­தில் இறங்­கி­யது.

கார் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்­தக் காருக்­குள் ஜெலட்­டின் குச்­சி­கள் இருந்­தது அதி­கா­ரி­கள் நடத்­திய பரி­சோ­தனை­களில் தெரியவந்தது.

பல பதிவு எண் தக­டு­கள் இருந்­தன. ஒரு மிரட்­டல் கடி­த­மும் இருந்­தது. 'இந்த முறை வெடி­பொ­ருள் வெடிக்­கும்படி பொருத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் அடுத்த முறை வெடிக்­கும்' என அக்கடிதத்­தில் எழு­தப்­பட்டு இருந்­த­து.

காரின் உள்ளே ஒரு­வர் பல மணி நேரம் காத்­தி­ருந்து பிறகு கீழே இறங்கி சென்­றி­ருக்­கி­றார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதை­ய­டுத்து அம்­பானி வீட்டுக்­குப் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பல கோணங்­களில் புலன்விசா­ரணை தொடங்கி இருக்­கிறது.