அனைத்துலக விமானப் பயணங்களுக்கு தடையை நீட்டித்தது இந்தியா

அனைத்துலக விமானப் பயணங்களுக்கு தடையை நீட்டித்தது இந்தியா

1 mins read
8a7ff551-298f-44b5-b775-fc4aa8495456
படம்: புளூம்பெர்க் -

கொரோனா கிருமிப் பரவல் காரணமாக இந்தியாவில் பல மாதங்களாக அனைத்துலக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் உள்நாட்டு விமானச் சேவைகளை இந்திய அதிகாரிகள் படிப்படியாக மீண்டும் தொடங்கி வைத்தனர்.

அனைத்துலகப் பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா கிருமித்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய அரசு கடந்த ஆண்டு மே மாத்திலிருந்து 'வந்தே பாரத் மிஷன்' என்ற திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

மேலும் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்களை மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் அனைத்துலகப் பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமானப் போக்கு வரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

"அனைத்துலக விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. "எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது," என்று இந்திய விமானப் போக்குரவத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்