தலைக்கவசம் அணியாத தம்பதிக்கு ரூ.500 அபராதம்; பணமில்லாததால் தாலியைக் கழற்றி நீட்டிய பெண்

கர்நாடகாவின் ஹக்கேரி பகுதியில் உள்ள ஹுல்லோலிஹட்டி கிராமத்தில் வசிக்கும் 30 வயது பாரதி விபூதி அவரது கணவர் ஆகிய இருவரும் அருகில் உள்ள நகரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

அங்கு 1,700 ரூபாய்க்கு கட்டில் ஒன்று வாங்கிய அவர்கள், கையில் மிச்சமிருந்த 100 ரூபாய்க்கு காலை உணவு சாப்பிட்டனர்.

பின்னர் தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏறி வீடு நோக்கி கிளம்பினர்.

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதியை போலிசார் பிடித்து 500 ரூபாய் அபராதம் விதித்தபோது, கையில் பணம் இல்லாததால், தாலிக்கு இணையான ‘மங்கல சூத்திரா’ எனும் சங்கிலியைக் கழற்றி பணத்துக்குப் பதிலாக வைத்துக்கொள்ளும்படி கூறியுள்ளார் பாரதி.

போலிசாருக்கும் அந்தத் தம்பதிக்கும் இடையேயான உரையாடல் காணொளி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

போலிசார் அந்த சங்கிலியைப் பெற்றுக்கொண்டனரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!