தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளிமஞ்சாரோ சிகரம் தொட்டு ஆந்திர சிறுமி சாதனை

1 mins read
b0e4e81b-fe29-4da2-8429-2d6851045d12
கிளிமஞ்சாரோ மலை சிகரம் அடைந்த 9 வயது ரித்விகா ஸ்ரீ. படங்கள்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ என்ற 9 வயது சிறுமி ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோவின் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலையின் சிகரத்தில் ஏறிய இளம் வயதுடையவர்களில் இவர் 2ஆம் இடத்தில் உள்ளார்.

மேலும் கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய ஆசிய நாட்டைச் சேர்ந்த இளம்நபர் என்ற சாதனையையும் ரித்விகா ஸ்ரீ படைத்துள்ளார்.

பள்ளியில் படித்து வரும் ரித்விகா ஸ்ரீ, கடல் மட்டத்தில் இருந்து 5,681 மீட்டர் உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தின் கில்மன் சிகரத்தை அடைந்துள்ளார்.

வழிகாட்டியான தமது தந்தையுடன் சேர்ந்து அவர் மலை ஏறினார்.