பெண் என்பதால் முன்னேற்றம் தடை

பெங்­க­ளூரு: இந்­தி­யப் பெண்­களில் 85 விழுக்­காட்­டி­ன­ரின் முன்­னேற்­ற­மும் பதவி உயர்வு போன்ற வளர்ச்­சிக்­கான அம்­சங்­களும் பாலின வேறு­பாடு கார­ண­மாக தடுக்­கப்

­ப­டு­வ­தாக புதிய ஆய்வு ஒன்று தெரி­வித்துள்­ளது.

லிங்­கிட்­இன் சமூக ஊட­கம் 'வாய்ப்பு குறி­யீடு 2021' என்­னும் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது.

இந்­தி­யா­வில் உள்ள பெண்­கள் ஆசிய-பசி­பிக் வட்­டார நாடு­களில் உள்ள இந்­தி­யப் பெண்­க­ளைக் காட்­டி­லும் பாலின தாக்­கத்­தால் தங்­க­ளது வேலை­யி­டங்­களில் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் முன்­னேற முடி­யா­மல் தவிப்­ப­தா­க­வும் அந்த அறிக்­கை குறிப்­பி­டு­கிறது.

தங்­க­ளது முன்­னோ­ரின் கால­கட்­டத்­தைக் காட்­டி­லும் தற்­போது பாலின பாகு­பாடு குறைந்­தி­ருப்­ப­தாக 66 விழுக்­காட்­டி­னர் கருத்­துத் தெரி­வித்­த­போ­தி­லும் இந்­தி­யா­வில் வேலை செய்­யும் பெண்­கள் இன்­னும் சிர­மங்­க­ளையே சந்­திக்­கின்­ற­னர் என்­கிறது ஆய்வு. வேலை­யி­டத்­தில் தங்­க­ளது நிறு­வ­னங்­கள் ஆண்­க­ளுக்கே அதிக சலு­கை காட்­டு­வ­தாக ஐந்­தில் ஒரு பெண் ஊழி­யர் (22%) கூறி இருக்­கி­றார்.

ஜிஎ­ஃப்கே என்­னும் சுயேச்­சை­யான நிறு­வ­னம் மூலம் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் நடத்­தப்­பட்ட ஆய்­வில் ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்தில் 10,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். அவர்­கள் 18க்கும் 65க்கும் இடைப்­பட்ட வய­தி­னர். இந்­தி­யா­வில் கலந்­து­கொண்­டோர் எண்­ணிக்கை 2,285. இவர்­களில் 1,223 பேர் பெண்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!