பாலியல் குற்றவாளி விவகாரம்: சிக்கலில் தலைமை நீதிபதி

மும்பை: பள்ளி மாண­வியை திரு­ம­ணம் செய்­து­கொண்­டால் பாலி­யல் குற்­றத் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்­க­லாம் என சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் குற்­ற­வா­ளிக்கு யோசனை தெரி­வித்த உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­திக்கு எதிர்ப்பு வலுக்­கிறது.

மகா­ராஷ்­டிரா மாநில மின்­சார உற்­பத்தி நிறு­வ­னத்­தின் தொழில்­நுட்ப வல்­லு­நர் மோகித் சுபாஷ் சவான் என்­ப­வர் 16 வயது பள்ளி மாண­வியை சிறார் வதை செய்­த­தற்­காக போக்சோ (பாலி­யல் குற்­றங்­களில் இருந்து குழந்­தை­க­ளைப் பாது­காத்­தல்) சட்­டம் 2012ன் கீழ் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்.

தமக்கு பிணை வழங்­கக் கோரி சவான் தாக்­கல் செய்த மனுவை உச்ச நீதி­மன்ற நீதி­பதி சரத் அர­விந்த் பாப்டே, 64, (படம்) விசா­ரித்­தார். குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரி­டம், "நீ பாலி­யல் வன்­மு­றைக்கு உள்­ளாக்­கிய அந்­தப் பெண்ணைத் திரு­ம­ணம் செய்­யத் தயாரா?," என்று கேட்­டார்.

அதற்குப் பதிலளித்த சவான், "ஏற்­கெ­னவே அந்­தப் பெண்­ணி­டம் என்னை திரு­ம­ணம் செய்­து­கொள்­ளு­மாறு கேட்­டேன். ஆனால், அவர் சம்­ம­திக்­க­வில்லை. தற்­போது எனக்கு திரு­ம­ணம் ஆகி­விட்­ட­தால் அவரைத் திரு­ம­ணம் செய்ய முடி­யாது," என்றார்.

நீதி­பதி அப்­போ­தும், "உன்­னால் சீர­ழிக்­கப்­பட்ட பெண்­ணைத் திரு­ம­ணம் செய்­வ­தாக இருந்­தால் மட் டுமே உனக்கு உதவி செய்­ய­மு­டி­யும். இல்­லை­யெ­னில், அரசாங்க வேலையை இழந்து சிறை செல்ல நேரி­டும்," என்­றார்.

உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­யின் இச்­செ­யல் கடும் எதிர்ப்­புக்கு ஆளாகி உள்­ளது.

குறிப்­பாக பெண்­ணு­ரிமை இயக்­கத்­தி­னர், நீதி­பதி பதவி வில­கக் கோரி ைகயெ­ழுத்து இயக்­கம் நடத்தி வரு­கின்­ற­னர். புதன்­கி­ழமை காலை வரை 5,200 பேரி­டம் கையெ­ழுத்து பெறப்­பட்­டி­ருப்­ப­தாக அதனை முன்­னின்று நடத்­தும் வாணி சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!