இந்தியாவில் தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று அண்மையில் குறைந்து வந்தது. ஆனால், இப்போது கடந்த சில நாட்களாக தொற்றுக்குப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,435 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் 242 உருமாறிய தொற்று பாதிப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,031 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,26,075 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதுவரையிலும் 1,66,16,048 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 வரையில் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டப் பணி மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!