பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம்: விவசாயிகள் முடிவு

பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம்: விவசாயிகள் முடிவு

1 mins read
9f98e161-2834-4809-902f-de53eff407a7
பிப்ரவரி 18ஆம் தேதி மோடிநகர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகள். படம்: ஆனிந்தித்தோ முக்கர்ஜி / புளும்பெர்க் -

புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளை மறுநாள் 100வது நாளை எட்டுகிறது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், பாஜக அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் எதிர் அணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.