குழந்தையைச் சுமந்துகொண்டே சாலையில் பணியாற்றிய பெண் போலிஸ்

குழந்தையைச் சுமந்துகொண்டே சாலையில் பணியாற்றிய பெண் போலிஸ்

1 mins read
8c30c561-5b28-4fc9-bcf7-43491118d6e0
-

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போக்குவரத்து போலிஸ் ஒருவர் தனது கைக்குழந்தையைச் சுமந்துகொண்டு பணியில் ஈடுபடும் காணொளி இணையத்தில் வலம் வந்து அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரியங்கா என்ற அந்த போலிஸ் அதிகாரிக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான நேரத்தைக் கொடுக்காமல் வேலைக்கு வர கட்டாயப்படுத்தியதால் அவர் தனது கைக்குழந்தையை எடுத்துச் சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை இடுப்பில் வைத்தப்படி அந்தப் பெண்ணைப் பணிபுரிய வைத்த உயரதிகாரிகளுக்கு எதிராக இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.