ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்று பாதிப்பு

ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கிருமித்தொற்று பாதிப்பு

2 mins read

புது­டெல்லி: ஆறு மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் அன்­றாட எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரித்து வரு­கிறது.

அதிக பாதிப்­புள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா தொடர்ந்து முதல் இடத்­தில் உள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 11 ஆயி­ரம் பேரை கிருமி தொற்­றி­யுள்­ளது.

மத்­திய, மாநில அர­சு­க­ளின் தீவிர நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் கடந்த மூன்று மாதங்­க­ளாக வெகு­வா­கக் குறைந்­துள்­ளது.

அன்­றாட பாதிப்பு சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை பத்­தா­யி­ரத்­துக்­கும் குறை­வாக இருந்­தது.

இந்­நி­லை­யில் பிப்­ர­வரி மாத இறுதி முதல் அன்­றாட எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கத் துவங்கி உள்­ளது.

இதன் எதி­ரொ­லி­யாக மகா­ராஷ்­டிரா, கேரளா, பஞ்­சாப், கர்­நா­டகா, குஜ­ராத், தமி­ழ­கத்­தில் நோய்த்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் கிரு­மித்­தொற்­றால் 18,599 பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டது உறு­தி­யா­னது.

இவர்­களில் 11,141 பேர் மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர். கேர­ளா­வில் 2,100 பேரும் பஞ்­சாப்­பில் 1,043 பேரும் தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் பதி­வான புதிய நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் 86.25 விழுக்­காடு மேற்­குறிப்­பிட்ட ஆறு மாநி­லங்­க­ளில்­தான் பதி­வாகி உள்­ளது. எனி­னும் நேற்று முன்­தி­னம் நாடு முழு­வ­தும் 97 பேர் உயிரிழந்து ­விட்­ட­னர் என்­றும் இவர்­களில் 38 பேர் மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 18 மாநி­லங்­களில் உயி­ரி­ழப்பு ஏது­மில்லை என்­ப­தும் தெரிய வந்­துள்­ளது.

ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய குடி­சைப்­ப­கு­தி­யான தாரா­வி­யில் கடந்த மூன்று மாதங்­க­ளாக அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் இருந்து வந்­தது.

இந்­நி­லை­யில் திங்­கட்­கி­ழமை அங்கு புதி­தாக 18 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.