ரயில்வே அலுவலக கட்டடத்தில் தீ: 9 பேர் பலி

ரயில்வே அலுவலக கட்டடத்தில் தீ: 9 பேர் பலி

1 mins read

கோல்கத்தா: ரயில்வே அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் பலியான நிலையில், இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ரயில்வே அலுவலகம் கோல்கத்தாவில் 13 மாடிகள் கொண்ட கட்ட டத்தில் இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு இந்தக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது கட்டடத்தில் இருந்த ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர்.

இவர்களில் நான்கு தீயணைப்பு வீரர்கள், துணை காவல் ஆய்வாளர் ஒருவர், ரயில்வே ஊழியர்கள் இருவர் அடங்குவர்.

விபத்து குறித்து ரயில்வே துறையின் நான்கு முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..