இந்தியாவில் ஒரே நாளில் அதிக கிருமிப் பரவல்

இந்தியாவில் ஒரே நாளில் அதிக கிருமிப் பரவல்

1 mins read
07e6dbbc-6939-49c0-9d8a-6c476d6d2eda
இந்தியா முழுவதும் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

இந்தியா முழுவதும் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 83 நாட்களில் நேற்றைய தொற்று எண்ணிக்கையே மிகவும் அதிகம். குறிப்பாக, இந்த ஆண்டு பிறந்த பின்னர் ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. இதற்கு முன் 2020 டிசம்பரில் 26,624 பேருக்கு தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகக் கருதப்பட்டது. புதிய எண்ணிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,33,728 ஆக அதிகரித்துவிட்டது. தொற்று பாதிப்பால் புதிதாக 140 பேர் உயிரிழந்துவிட்டனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,58,446 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்கள் மட்டுமே மொத்த தொற்றில் 71.69% பங்களிக்கின்றன. பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, இதுவரை குண மடைந்தோரின் எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,02,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,82,18,457 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்