வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

1 mins read

புது­டெல்லி: தமி­ழ­கம், கேரளா, புதுச்­சேரி உள்­ளிட்ட 5 மாநில தேர்­தல் தேதி­கள் அறி­விக்­கப்­பட்டு தேர்­தல் களம் சூடு­பி­டித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் வாக்குப் பதிவு இயந்­தி­ரம் தொடர்பாக தலைமைத் தேர்­தல் ஆணை­யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ''மின்­னணு வாக்­குப்

­ப­திவு இயந்­தி­ரத்­தில் முறை­கேடு செய்­ய­லாம் என முன்­னாள் தலைமை தேர்­தல் ஆணை­யர் டி.எஸ்.கிருஷ்­ண­மூர்த்தி சில ஆண்­டு­க­ளுக்கு முன் வெளியிட்ட வதந்தி தற்­போது மீண்­டும் சமூக வலைத்­த­ளங்­களில் உலா வந்துகொண்­டி­ருக்­கிறது. வாக்குப் பதிவு இயந்­தி­ரத்­தில் முறை­கேடு நடக்க வாய்ப்­பு­கள் இல்லை. அந்த இயந்­தி­ரத்­தில் முறை­கேடு செய்­ய­லாம் என தக­வல் பரப்­புவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்,'' என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.