தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அம்பானி வீட்டருகே மர்ம கார்: காவல்துறை அதிகாரி கைது

1 mins read
e1532c9e-3c8d-4052-bdbd-fa94d5d04aa3
காவல்­துறை உதவி ஆய்­வா­ளர் சச்­சின் வாசேவை தேசிய புல­னாய்­வுப் பிரிவு கைது செய்­த­து. படம்: இந்திய ஊடகம் -

மும்பை: பெரும் தொழி­ல­தி­பர் 'ரிலை­யன்ஸ்' முகேஷ் அம்­பா­னி­யின் வீட்­டிற்­க­ருகே கடந்த மாதம் வெடி­பொ­ருள்­க­ளு­டன் நின்றிருந்த மர்ம கார் தொடர்­பான வழக்­கில், காவல்­துறை உதவி ஆய்­வா­ளர் சச்­சின் வாசேவை தேசிய புல­னாய்­வுப் பிரிவு கைது செய்­த­து.

மும்­பை­யில் உள்ள புல­னாய்­வுப் பிரிவு தலை­மை­ய­கத்­தில் நேற்று முன்­தி­னம் வாசே­வி­டம் அதி­கா­ரி­கள் 12 மணி நேரம் விசா­ரணை நடத்­தினர். அதன்­பின் அவர் கைது செய்­யப்­பட்­டார். வரும் 25ஆம் தேதி வரை அவ­ரைப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­மன்­றம் நேற்று உத்தரவிட்டது.

அந்த காரின் உரி­மை­யா­ள­ரான மன்­சுக் ஹிரேன் கொலை செய்­யப்­பட்­டதை புல­னாய்­வுப் பிரிவு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன் தொடர்­பில் மகா­ராஷ்­டிரா பயங்­க­ர­வா­தத் தடுப்பு போலி­சா­ரும் வாசே­வி­டம் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

மன்­சுக்­கின் காரை வாசே நான்கு மாத­கா­ல­மா­கக் கட­னா­கப் பெற்­றி­ருந்­த­தா­க­வும் கடந்த மாதம் 5ஆம் தேதி­தான் அதைத் திருப்­பித் தந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

குறிப்புச் சொற்கள்