வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் கடும் அவதி

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மக்கள் கடும் அவதி

2 mins read

புது­டெல்லி: வங்கி ஊழி­யர்­க­ளின் வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மாக நாடு முழு­வ­தும் வங்­கிப் பணி­கள் முடங்­கிப் போயின. ஏடி­எம் மையங்­களில் உள்ள இயந்­தி­ரங்­களில் பணம் இல்­லா­த­தால் பொது­மக்­கள் கடும் அவ­திக்கு ஆளா­கி­னர்.

இரண்டு பொதுத்­துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­டித்து நாடு முழு­வ­தும் வங்கி ஊழி­யர்­கள் இரண்டு நாள் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்தை அறி­வித்து இருந்­த­னர்.

அதன்­படி நேற்று அப்­போ­ராட்­டம் தொடங்­கி­யது. இதில் நாடு முழு­வ­தும் உள்ள ஒன்­பது லட்­சம் வங்கி ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் பங்­கேற்­ற­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நாடு முழு­வ­தும் உள்ள 88 ஆயி­ரம் வங்­கிக் கிளை­கள் நேற்று மூடப்­பட்­டி­ருந்­தன. தமி­ழ­கத்­தில் மட்­டும் 14 ஆயி­ரம் கிளை­கள் மூடப்­பட்­ட­தா­க­வும் இதன் கார­ண­மாக பணம் எடுத்­தல், காசோ­லைப் பரி­வர்த்­தனை உள்­ளிட்ட சேவை­கள் அடி­யோடு முடங்­கின.

கடந்த சனிக்­கி­ழமை, ஞாயிற்றுக்­கி­ழமை வார விடு­முறை என்­ப­தால் வங்­கி­கள் இயங்­க­வில்லை. இந்­நி­லை­யில், இரு நாள்­கள் வேலை நிறுத்­த­மும் நடை­பெ­று­வ­தால் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மேலும் வங்கி ஊழி­யர்­கள் பலர் சென்னை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் நேற்று சாலை மறி­ய­லி­லும் ஈடு­பட்­ட­தால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது.

வங்கி ஊழி­யர்­க­ளின் போராட்­டத்­தால் நாடு முழு­வ­தும் நாள் ஒன்­றுக்கு 16,500 கோடி மதிப்­புள்ள 2 கோடி காசோ­லை­கள் தேக்­கம் அடைந்­துள்­ள­தா­க­வும் மத்­திய அரசு தனது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ள­வில்லை என்­றால் போராட்­டம் தீவி­ரம் அடை­யும் என்­றும் அகில இந்­திய வங்கி ஊழி­யர் சங்க பொதுச்­செ­ய­லா­ளர் சி.எச்.வெங்­க­டாச்­ச­லம் செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.