அமீர்கானை வாழ்த்திய சீன ரசிகர்கள்

அமீர்கானை வாழ்த்திய சீன ரசிகர்கள்

1 mins read

புது­டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கு சீன ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பெய்ஜிங் கில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கூடிய ஏராளமான ரசிகர்கள், அமீர்கானின் 56ஆவது பிறந்தநாளையொட்டி பெரிய கேக் ஒன்றை வெட்டியதுடன், அவரது படப் பாடல்களையும் பாடி வாழ்த்தினர்.

சிலர் தங்கள் அபிமான நடிகரான அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்துக் காட்டினர்.

மேலும், அமீர்கான் நடித்த திரைப்படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டன.