மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 16,000 பேர் பாதிப்பு: முதல்வர் உத்தவ் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 16,000 பேர் பாதிப்பு: முதல்வர் உத்தவ் எச்சரிக்கை

2 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வரை சுமார் முப்­பது மில்­லி­யன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சில மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

குறிப்­பாக மகா­ராஷ்­டி­ரா­வில் நிலைமை மோச­மாக உள்­ளது என ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று முன்­தி­னம் புதி­தாக 26,291 பேருக்குப் புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. 118 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்­டும் ஒரே நாளில் சுமார் 16 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு நிலைமை மோச­ம­டைந்து வரு­வ­தால், நாக்­பூ­ரில் நேற்று முதல் முழு ஊர­டங்கு உத்­த­ரவு அம­லுக்கு வந்­துள்­ளது.

மக்­கள் அலட்­சி­யப் போக்­கு­டன் இருந்­தால் மாநி­லம் முழு­வ­தும் மீண்­டும் ஊர­டங்கு உத்­த­ரவை அமல்­ப­டுத்த நேரி­டும் என அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 2.3 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. அங்கு இது­வரை 52,861 பேர் கிரு­மித்­தொற்­றால் பலி­யா­கி­யுள்­ள­னர்.

நாக்­பூர் நக­ரில் ஊர­டங்கு அம­லாகி இருப்­ப­தை­ய­டுத்து அங்கு நேற்று மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை முடங்­கி­யது. பெரும்­பா­லான சாலை­கள் மக்­கள் நட­மாட்­டம் இன்றி வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்­கி­டையே கர்­நா­ட­கா­வி­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இது தொடர்­பாக அதி­கா­ரி­கள், சுகா­தார நிபு­ணர்­க­ளு­டன் முதல்­வர் எடி­யூ­ரப்பா நேற்று தீவிர ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் குறித்து அவர் இன்று முக்­கிய அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வார் எனத் தெரிகிறது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் எண்­ணிக்கை சுமார் 30 மில்லியனை நெருங்­கி­யுள்­ளது.

முதற்­கட்­ட­மாக சுகா­தார பணி­யா­ளர்­கள், முன்­கள வீரர்­க­ளுக்கு கடந்த ஜன­வரி 16ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வந்த நிலை­யில், 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், 45 வய­துக்கு மேற்­பட்ட நோயா­ளி­களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

அரசு, தனி­யார் சுகா­தார மையங்­களில் அமைக்கப்பட்ட தடுப்­பூசி முகாம்­களில் தினந்­தோ­றும் ஆயிரக்­க­ணக்­கானோர் தடுப்­பூசி போட்டு வரு­கின்­ற­னர்.