தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'2,000 ரூபாய் நோட்டுகள் ஈராண்டுகளாக அச்சிடப்படவில்லை'

1 mins read
d1e433d0-073b-49d5-9e19-37b5adad4007
இந்த நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்ததை அடுத்து, அவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. படம்: இந்திய ஊடகம் -

2,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்ததை அடுத்து, அவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஈராண்டுகளாக அந்த நோட்டுகள் அச்சிடப்படவில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

தற்போது புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு என்பதால், 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதையும் கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கவுமே அவை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்