மும்பை காங்கிரஸ் துணைத் தலைவராக நக்மா நியமனம்

மும்பை காங்கிரஸ் துணைத் தலைவராக நக்மா நியமனம்

1 mins read

மும்பை: மும்பை காங்­கி­ரஸ் துணைத் தலை­வ­ராக நடிகை நக்மா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இதற்­கான அறி­விப்பை காங்­கி­ரஸ் கட்­சி­யின் இடைக்­கால தலை­வர் சோனியா காந்தி வெளி­யிட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்கு முழு நேர தலை­வர் வேண்­டும் என மூத்த தலை­வர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் சோனியா காந்தி மாநில அள­வில் நிர்­வாக மாற்­றங்­க­ளைச் செய்து வரு­கி­றார்.

அந்த வகை­யில் மும்பை காங்­கி­ரஸ் தலை­வ­ராக பாய் ஜக்­தாப் கடந்த டிசம்­பர் மாதம் நிய­மிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து மும்பை காங்­கி­ரஸ் புதிய நிர்­வா­கி­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி ஆறு மூத்த துணை தலை­வர்­கள், 15 துணை தலை­வர்­கள், 42 பொது செய­லா­ளர்­கள், 76 செய­லா­ளர்­கள், 30 நிர்­வாக உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். 15 துணை தலை­வர்­களில் நக்­மா­வும் ஒரு­வர் ஆவார்.

இதே­போல சுப்­ர­ம­ணி­யம், கந்­த­சாமி கிருஷ்­ணன் வேலு உள்­ளிட்ட 76 பேர் செய­லா­ள­ரா­க­வும், ஜக­தீ­சன் நாடார் உள்­ளிட்ட 30 பேர் நிர்­வாக குழு உறுப்­பி­னர்­க­ளா­க­வும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.