கட்சியில் இல்லாதவர் வேட்பாளராக அறிவிப்பு

கட்சியில் இல்லாதவர் வேட்பாளராக அறிவிப்பு

1 mins read

திரு­வ­னந்­த­புரம்: பாஜ­க­வில் உறுப்­பி­ன­ராக கூட இல்­லாத ஒரு­வரை அக்­கட்­சித் தலைமை வேட்­பா­ள­ராக அறி­வித்த வேடிக்கை கேர­ளா­வில் நிகழ்ந்­துள்­ளது.

கேர­ளா­வில் ஏப்­ரல் 6ஆம் தேதி சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெ­று­கிறது. இதை­ய­டுத்து வேட்­பா­ளர் பட்­டி­யலை பாஜக தலைமை வெளி­யிட்­டது.

வய­நாடு மாவட்­டம், மானந்­த­வாடி தொகு­தி­யில் மணி­கண்­டன் என்­கிற மணி­குட்­டன் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டு இருந்­தார்.

ஆனால் தமக்கு இந்த விவ­ரம் தெரி­யாது என்­றும் தேர்­த­லில் போட்­டி­யி­டும் விருப்­பம் தமக்கு அறவே இல்லை என்­றும் மணி­கண்­டன் தெரி­வித்­துள்­ளார்.

"தொலைக்­காட்சியில் பார்த்துத்­தான் என்னை வேட்­பா­ள­ராக அறி­வித்­ததை தெரிந்து கொண்­டேன்.

"எனது கல்­வித் தகு­திக்கு ஏற்ப வேலை செய்து, குடும்­பத்­து­டன் சேர்ந்து வாழ்­வ­தையே விரும்­பு­கி­றேன்.

"நான் பாஜக அனு­தாபி அல்ல. என­வே­தான் அக்­கட்­சி­யின் அறி­விப்பை மகிழ்ச்­சி­யோடு நிரா­க­ரித்­தேன்," என்று மணி­கண்­டன் தெரி­வித்­துள்­ளார்.