மேலும் 10 கோடி தடுப்பூசி மருந்து

மேலும் 10 கோடி தடுப்பூசி மருந்து

2 mins read

புது­டெல்லி: சீரம் நிறு­வ­னத்­தி­டம் இருந்து மேலும் 10 கோடி முறை போடப்­ப­டக்­கூ­டிய கொரோனா தடுப்பு ஊசியை வாங்க மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இந்­தி­யா­வில் சீரம், பாரத் பயோ­டெக் நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கொரோனா தடுப்பு மருந்­து­களை மத்­திய அரசு வாங்கி வரு­கிறது.

இந்த இரு நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து வாங்­கப்­படும் தடுப்­பூ­சி­களை இந்­தியா முழு­வ­தும் மத்­திய அரசு அனுப்பி மக்­க­ளுக்கு செலுத்­தி­வ­ரு­கிறது.

செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி இந்­தியா முழு­வ­தும் மூன்­ற­ரைக் கோடி பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

மேலும் நாளுக்கு நாள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்கொண்டே இருக்­கிறது.

இத­னால் சீரம் நிறு­வ­னத்­தி­டம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்­பூசி மருந்­து­களை வாங்க மத்­திய அரசு முடிவு செய்து அதற்­கான கொள்­மு­தல் ஆணையை அனுப்பி உள்­ளது.

ஆஸ்ட்­ரா­ஸெ­ன­கா­வும் ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழகமும் சேர்ந்து உரு­வாக்­கிய கோவி­ஷீல்ட் தடுப்­பூசி மருந்தை உல­கின் ஆகப் பெரிய தடுப்பு மருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான சீரம் தயா­ரித்து உள்­ளது. ஒரு முறை போட்­டுக்­கொள்­ளக்­கூ­டிய கொவி­ஷீல்ட் தடுப்­பூசி மருந்­தின் விலையை இதற்கு முன்­னர் 210 ரூபா­யாக நிர்­ண­யித்­தி­ருந்த சீரம் நிறு­வ­னம் பின்­னர் அதனை ரூ.157.50க்கு குறைத்­தது.

புதி­தாக வாங்­கத் திட்­ட­மி­டப்­பட்டு உள்ள பத்து கோடி தடுப்­பூ­சிக்­கும் ஆகும் செலவை மத்­திய சுகா­தார அமைச்சு ஏற்­கிறது.

இதற்­கென வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் நிதி ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. இதற்கு முன்­னர் வரை தடுப்­பூ­சிக்­கான செலவை பிர­த­ம­ரின் பரா­ம­ரிப்பு நிதி ஏற்­றுக்­கொண்­ட­தாக தக­வல் ஒன்று தெரி­வித்­தது.