24 வார கருவை கலைக்கலாம்

24 வார கருவை கலைக்கலாம்

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வி­லுள்ள பெண்­கள் 20 வாரம் வரை வளர்ந்த கருவை கலைத்­துக்­கொள்ள சட்­டம் அனு­மதி அளிக்­கிறது. அதே­ச­ம­யம், பல்­வேறு பாலி­யல் வன்­கொ­டுமை உள்­ளிட்ட பல்­வேறு சூழல்­க­ளால் பாதிக்­கப்­பட்ட பெண்­கள், மாற்­றுத்­தி­ற­னாளி பெண்­கள் ஆகி­யோ­ரின் நலன்­களை முன்­னி­றுத்தி, கருக்­க­லைப்பு காலத்தை 24 வாரங்­க­ளாக அதி­க­ரித்து சட்­டத்திருத்­தம் செய்ய வேண்­டும் என சமூக நலன் சார்ந்த அமைப்­பு­களும் பெண்­ணிய அமைப்­பு­களும் மத்­திய அர­சுக்கு நீண்ட கால­மா­கவே கோரிக்கை வைத்­த­படி இருந்­தன.

அத­னைத் தொடர்ந்து மத்­திய சுகா­தார அமைச்சு கடந்த ஆண்டு இதற்­கான சட்­டத் திருத்த மசோ­தா­வைக் கொண்டு வந்­தது. அமைச்­ச­ர­வை­யின் ஒப்­பு­த­லைப் பெற்ற மசோதா மக்­க­ள­வை­யி­லும் நிறை­வேற்­றப்­பட்­டது.

இந்­தச் சூழ­லில், நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை மாநி­லங்­க­ள­வை­யி­லும் இந்­தச் சட்­டத் திருத்த மசோதா நிறை­வேற்­றப்­பட்­டது. அதி­ப­ரின் ஒப்­பு­த­லைப் பெற்ற பின்­னர் சட்­டத்­தி­ருத்­தம் அம­லுக்கு வரும். அதன் பின்­னர், 24 வார­கால கரு­வைக் கலைக்க பெண்­க­ளுக்கு அனு­மதி கிடைக்­கும். இதற்­கி­டையே இந்­தச் சட்­டத் திருத்­தம் குறித்த எதிர்­மறை விமர்­ச­னங்­களும் எதி­ரொ­லிக்­கத் துவங்­கி­யுள்­ளன.