நில மோசடி: விளக்கம் அளிக்க சந்திரபாபு நாயுடுவுக்கு உத்தரவு

நில மோசடி: விளக்கம் அளிக்க சந்திரபாபு நாயுடுவுக்கு உத்தரவு

1 mins read

ஹைத­ரா­பாத்: தெலுங்கு தேசம் கட்­சித் தலை­வ­ரும் முன்­னாள் முதல்­வ­ரு­மான சந்­தி­ர­பாபு நாயு­டு­வுக்கு எதி­ராக பல்­வேறு வழக்­கு­களில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. ஆந்­திர மாநில பிரி­வி­னைக்­குப் பிறகு 2015ஆம் ஆண்டு அம­ரா­வ­தி­யில் புதிய தலை­ந­க­ரம் அமைக்க முந்­தைய தெலுங்கு தேசம் கட்­சி­யின் ஆட்சி­ முயற்சி எடுத்தது.

அப்­போது, விவ­சா­யி­க­ளி­டம் இருந்து முறை­கே­டாக நிலம் பெறப்­பட்­ட­தாக ஆளும் ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எம்­எல்ஏ ராம­கி­ருஷ்ணா ரெட்டி புகார் அளித்­தார்.

"அர­சுத் தரப்­பில் சிலர் விவ­சா­யி­க­ளி­டம் பொய் வாக்­கு­றுதி தந்து அவர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான இழப்­பீட்­டுத் தொகை­யும் தரா­மல் விவ­சாய நிலங்­களை வாங்கி மோசடி செய்­துள்­ள­னர்," என அவர் அந்­தப் புகா­ரில் கூறி­யி­ருந்­தார்.

இதன் தொடர்­பாக கடந்த 12ஆம் தேதி மாநில குற்­றப்­பி­ரிவு போலி­சார் வழக்­குப் பதிவு செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்த நில முறை­கேடு தொடர்­பாக விஜ­ய­வா­டா­விலுள்ள சிஐடி அலு­வ­ல­கத்­தில் வரும் 23ஆம் தேதி நேரில் வந்து விளக்­கம் அளிக்க வேண்­டும் என சந்­தி­ர­பாபு நாயு­டு­வுக்கு சிஐடி போலி­சார் நோட்­டீஸ் கொடுத்­த­னர். அவ­ரது வீட்­டில் இந்த நோட்­டீஸ் ஒட்­டப்பட்­டுள்­ளது.