கொரோனா தொற்று: முன்னாள் மத்திய அமைச்சர் மரணம்

மும்பை: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் கொரோனா தொற்று பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்த முன்­னாள் மத்­திய அமைச்­சர் திலீப் காந்தி (படம்) சிகிச்சை பல­னின்றி நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார்.

திலீப்­ காந்தி, 69, மகா­ராஷ்­டிரா மாநில பாஜக மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரா­வார்.

1999ஆம் ஆண்டு அக­மத்­ நகர் மக்­க­ளவை தொகுதி உறுப்­பி­ன­ராக வெற்­றி­பெற்­றார். இதைத்­தொ­டர்ந்து, கடந்த 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்­பல் துறை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

2009, 2014 ஆம் ஆண்­டு­க­ளின் மக்­க­ள­வைத் தேர்­தல்

­க­ளி­லும் வெற்­றி­பெற்­றார் இவர். வயது முதிர்வு கார­ண­மாக 2019 மக்­க­ளவை தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யிட அவ­ருக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

இத­னால் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்த திலீப்­ காந்­திக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்­பது அண்­மை­யில் கண்­ட­றி­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, டெல்­லி­யிலுள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது.

ஆனால், சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் நேற்று அறி­வித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!